கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x

ரெயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்லப்படுகிறதா? என கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

ரெயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்லப்படுகிறதா? என கும்பகோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

பட்டாசு

கும்பகோணத்தில் ரெயில் பயணிகள் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து ரெயில்வே போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ரெயில் மற்றும் பஸ்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.

சோதனை

இந்த நிலையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்து ேசாதனை செய்தனர். அப்போது ரெயில் பயணிகள் கொண்டு வந்த அவரவர் உடைமைகளை ெரயில்வே போலீசார் சோதனை செய்த பிறகு பயணிகளை ரெயிலில் ஏற அனுமதித்தனர். மேலும் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் ரெயிலில் போலீசார் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை பயணிகள் கொண்டு செல்கின்றனரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடுவது குறித்து ரெயில் பயணிகளிடம் ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story