போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்துத்தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்துத்தேர்வு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்துத்தேர்வு தஞ்சையில் 4 மையங்களில் இன்று நடக்கிறது. இந்த தேர்வை 5,086 பேர் எழுதுகின்றனர்.

தஞ்சாவூர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி எழுத்துத்தேர்வு தஞ்சையில் 4 மையங்களில் இன்று நடக்கிறது. இந்த தேர்வை 5,086 பேர் எழுதுகின்றனர்.

எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டிற்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. தமிழ் தகுதித்தேர்வு பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடக்கிறது.தஞ்சை மாவட்டத்தில் திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம், வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகிய 4 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 5 ஆயிரத்து 86 பேர் எழுதுகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

போலீஸ்துறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் எழுத்துத்தேர்வை 672 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.


Next Story