மின்மாற்றியில் செம்புக்கம்பி திருட்டு
திருவோணம் அருகே மின்மாற்றியில் செம்புக்கம்பியை திருடி சென்ற மர்ம மனிதா்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு;
திருவோணத்தை அடுத்துள்ள அதம்பை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். விவசாயி, இவருக்கு சொந்தமான இடத்தில் மின்சார வாரியத்தின் மூலமாக அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இருந்த சுமார் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள செம்புக்கம்பிகளை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பிரிவு மின்வாரிய உதவி மின் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்புக்கம்பிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story