சுதந்திர தின பவள விழா கொண்டாட்டம்


சுதந்திர தின பவள விழா கொண்டாட்டம்
x

தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தில் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி

தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் சி.சக்திவேல் வரவேற்று பேசினார். தாளாளர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே.தனசேகர், சேலம் திரிவேணி எர்த் மூவர்ஸ் செயல் இயக்குனர் பி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பள்ளி தலைவரின் சேவைகள் குறித்து பாராட்டி பேசினர். தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் மாநில தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், நகராட்சி தலைவர் லட்சுமி, நகர செயலாளர் நாட்டான் மாது உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் பழனிசாமி நன்றி கூறினார்.


Next Story