மதுரையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா
x

மதுரையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை


மதுரையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 243 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மதுரையை பொறுத்தமட்டில், நேற்று ஒரேநாளில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 5 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். நேற்றைய நிலவரப்படி மதுரையில் கொரோனா பாதிப்புடன் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி அவசியம்

அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சையில் இருப்பவர்களுக்கு லேசான பாதிப்பு இருக்கிறது எனவும், தடுப்பூசி அவசியம் சரிவர செலுத்தினால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story