நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று:  ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று: ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல்

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 12 ஆக அதிகரித்தது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தற்போது 48 பேர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 83 ஆகும். இவர்களில் 67 ஆயிரத்து 501 பேர் குணமாகி விட்டனர். 534 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story