சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 61 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மகுடஞ்சாவடி, தாரமங்கலம், தலைவாசல், ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதித்தது. கொங்கணாபுரம், வீரபாண்டி, வாழப்பாடியில் தலா 2 பேர், காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டியில் தலா 3 பேர், ஓமலூரில் 4 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story