கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்


கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது சேலம்
x

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாறியது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு 7 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக நோய் தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சேலம் மாறி உள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story