பெண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா


பெண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா
x

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 6 போ் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திண்டுக்கல், சிலுவத்தூர் பகுதிகளை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.


Next Story