கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
நாட்டறம்பள்ளி அருகே ஜங்கலாபுரம் கூட்ரோட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது. ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் செண்பகாதேவி அனைவரையும் வரரேற்று பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓட்டப்போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி பள்ளியை அடைந்தனர். அங்கு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் தாசில்தார் குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.