சென்னையில் 11 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட தமிழகத்தில் 1,484 பேருக்கு கொரோனா


சென்னையில் 11 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட தமிழகத்தில் 1,484 பேருக்கு கொரோனா
x

சென்னையில் 11 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட தமிழகத்தில் 1,484 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

நேற்று 22 ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 815 பேரும், பெண்கள் 669 பேரும் உள்பட 1,484 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் 11 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 632 பேர், செங்கல்பட்டில் 239 பேர், திருவள்ளூரில் 79 பேர் என 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 60 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 277 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிகிச்சையில் 8 ஆயிரத்து 970 பேர்

இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 970 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 869 பேரும், செங்கல்பட்டில் 1,552 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 441 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

736 பேர் கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 24 ஆயிரத்து 293 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story