ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா


ஒரே நாளில்   26 பேருக்கு கொரோனா
x

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு உள்ளன. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதோடு 2 கட்ட தடுப்பூசியும் அனைவரும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

26 பேருக்கு தொற்று

அந்த வகையில் நேற்று மொத்தம் 503 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது கிள்ளியூர்-2, குருந்தன்கோடு-1, முன்சிறை-13, நாகர்கோவில்-2, ராஜாக்கமங்கலம்-1, திருவட்டார்-7 என மொத்தம் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 1-1-2022 முதல் தற்போது வரை 19 ஆயிரத்து 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story