ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் மெதுவாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இதேபோல் ஈரோட்டிலும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 304 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ஆக உயர்ந்தது. இதில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 957 பேர் குணமடைந்தார்கள். தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் 734 பேர் பலியாகி உள்ளனர்.


Related Tags :
Next Story