கைதி, டாக்டர் உள்பட 51 பேருக்கு கொரோனா


கைதி, டாக்டர் உள்பட 51 பேருக்கு கொரோனா
x

குமரியில் கைதி, டாக்டர் உள்பட 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் கைதி, டாக்டர் உள்பட 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மீண்டும் மிரட்டுகிறது

குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடா்ந்து நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் மிரட்ட தொடங்கி உள்ளது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் 1,040 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டதில் 51 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 28 ஆண்கள், 23 பெண்கள் ஆவர். அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 பேருக்கும், கிள்ளியூர் தாலுகாவில் 3 பேருக்கும், குருந்தன்கோடு பகுதியில் 3 பேருக்கும், முன்சிறையில் 9 பேருக்கும், நாகர்கோவிலில் 12 பேருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 4 பேருக்கும், திருவட்டாரில் 6 பேருக்கும், தக்கலையில் 8 பேருக்கும், மேல்புறம் மற்றும் தோவாளை ஆகிய பகுதிகளில் 2 பேர் என மொத்தம் 51 பேர் பாதிக்கப்பட்டனர்.

கைதி, டாக்டருக்கு கொரோனா

இதில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் கைதி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற கைதிகள், பணியில் இருந்த போலீசாருக்கும் சளி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.


Next Story