அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா; டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு


அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா; டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
x

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை

கிண்டி:

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தவகையில் இதுவரை 220 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 23 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 6 பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கொரோனா கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


Next Story