மேலும் 7 பேருக்கு கொரோனா


மேலும் 7 பேருக்கு கொரோனா
x

திண்டுக்கல்லில், மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் ஒன்றிரண்டாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 27 ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று பெண் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து இருக்கிறது. மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி அல்லது சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்தல் ஆகிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story