8 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனா். மொத்தம் 30 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 74 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 396 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதற்கிடையே இன்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
அதாவது சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த கடலூர், நெய்வேலியை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் மொத்தம் 30 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story