வேலூர் மாநகராட்சியில் 9 பேருக்கு கொரோனா


வேலூர் மாநகராட்சியில் 9 பேருக்கு கொரோனா
x

வேலூர் மாநகராட்சியில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 9 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று கண்டறியப்பட்ட 9 பேரும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story