தேனி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா
x

தேனி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தேனி

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இன்று மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணியாமலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் உலா வருகின்றனர்.

தேனி என்.ஆர்.டி. நகரில் இன்று நடந்த தனியார் பொழுதுபோக்கு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சிக்கு குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். சாலையில் அணிவகுத்து மக்கள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார ஊழியர்கள் அங்கு வந்து, மக்களை முக கவசம் அணிய அறிவுறுத்தினர். மக்களிடம் நிலவி வரும் அலட்சியம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் உள்ளது.


Next Story