நெல்லையில் 7 பேருக்கு கொரோனா


நெல்லையில் 7 பேருக்கு கொரோனா
x

நெல்லை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி 10 பேருக்கும், நேற்று முன்தினம் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மேலும் 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.


Next Story