வேலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 9 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 11 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரியும் அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பொது இடங்களில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story