கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
வெளிப்பாளையம்
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து 963 சிறப்பு முகாம்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விடுபட்டுப்போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 15 முதல் 18 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுடைய மாணவ, மாணவிகள் தவறாமல் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.