கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம்
மெலட்டூர்
வடக்குமாங்குடி, களஞ்சேரி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
வடக்குமாங்குடி ஊராட்சி
அம்மாப்பேட்டை ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சியில் கொேரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜன் தொடங்கி வைத்தார். முகாமில் மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் வடக்குமாங்குடி ஊராட்சியை சேர்ந்த ஏராளமானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
களஞ்சேரி ஊராட்சி
அம்மாப்பேட்டை ஒன்றியம் களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளி விவேகானந்தன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பூமா, மக்களை தேடி மருத்துவ திட்ட முகாம் தன்னார்வலர் மகாலட்சுமி மற்றும் மருத்துவ குழுவினர் களஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த 70 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தினர். இதில் பணித்தள பொறுப்பாளர் ஜீவிதா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஜெகத்குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.