சிறப்பு முகாமில் 23893 பேருக்கு கொரோனா தடுப்பூசி


சிறப்பு முகாமில் 23893 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் 23893 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், வெள்ளிமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்கள், பள்ளி வளாகம், சமுதாயக்கூடம் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்த முகாமில் 1,217 பேர் முதல் தவணை தடுப்பூசி, 19 ஆயிரத்து 788 பேர் 2-ம் தவணை தடுப்பூசி, 2 ஆயிரத்து 888 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 23 ஆயிரத்து 893 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


Next Story