1,700 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,700 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தவும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் என சுமார் 1,700 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த 5 நபர்கள் வீதம் 350 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் ஆர்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.