ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

மாவட்டத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 12,83,030 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 10,08,625 பேருக்கும் போடப்பட்டு உள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற 29 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் மட்டும் 8,16,144 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 30-வது கட்டமாக அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் 20,391 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story