நாமக்கல் மாவட்டத்தில் 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது


நாமக்கல் மாவட்டத்தில்  32-வது கொரோனா தடுப்பூசி முகாம்  நாளை நடக்கிறது
x

நாமக்கல் மாவட்டத்தில் 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 32-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 2,766 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 30 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 8 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story