பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x

மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், யூனியன் தலைவருமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story