கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது


கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது
x

மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 100-ஐ கடந்துள்ளது. மேலும் தினசரி பரிசோதனையையும் சுகாதாரத்துறை அதிகரித்துள்ளது.

மதுரை

மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 100-ஐ கடந்துள்ளது. மேலும் தினசரி பரிசோதனையையும் சுகாதாரத்துறை அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால், தமிழக அரசும் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வலியுறுத்தி இருக்கிறது.

மற்ற மாவட்டங்களை போல மதுரையிலும், கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. ஒன்று, இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது தினசரி பாதிப்பு 15, 16 என பதிவாகி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் 103 பேர்

மதுரையில் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. அதில், ஒரு சிலர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மீதமுள்ளவர்கள், வீட்டு தனிமைப்படுத்துதலில் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் தினமும் 50-க்கும் குறைவான நபர்களுக்குத்தான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனையும் அதிகமாகி உள்ளது. தற்போது தினசரி 250-க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றனர்.


Next Story