கொரோனா-வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனிவார்டு
தமிழ்நாட்டில் கொரோனா பரவல், வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
கோவை,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல், வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
இதுதவிர இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள் என கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், மூச்சுவிட சிரமப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.