பாமக எம்.எல்.ஏவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு


பாமக எம்.எல்.ஏவுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
x

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருளுக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்,

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பா.ம.க, வை சேர்ந்த அருள் இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே முதல் அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகே முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டார்.

இதனால் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு லேசாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் வீட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு தனிமையில் இருந்து வருகிறார்.

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு எம்எல்ஏ அருள் கேட்டுக் கொண்டுள்ளார்.

2-வது முறையாக எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story