குடிசை தீயில் எரிந்து சேதம்
சாயல்குடி அருகே தீயில் எரிந்து குடிசை சேதம் அடைந்தன.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடி வி.வி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் இவர் எஸ். கீரந்தை ஊராட்சி நோம்பக்குளம் கிராமத்தில் பனைத் தொழில் செய்வதற்காக குடிசை அமைத்து தங்கி உள்ளார். இவர் நேற்று பனை மரத்தில் இறக்கிய பதநீரை காய்ச்சி கொண்டிருந்தபோது காற்று அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக கூரையின் மீது தீ பற்றியது அதில் குடிசை முழுவதும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. குடிசையில் இருந்த கருப்பட்டி, ரேஷன் கார்டு, பாத்திரங்கள் தீயில் கருகி சாம்பலாயின. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நவீன் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
Related Tags :
Next Story