பருத்தி பறிக்கும் பணி தீவிரம்
பருத்தி பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்பருத்தி பறிக்கும் பணி தீவிரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாய பணிகளில் ஈடுபட தொடங்குகின்றனர். மாவட்டத்திலேயே நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி விவசாயத்தில்தான் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட பல கிராமங்களில் தற்போதுதான் பருத்தி சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனிடையே அரசமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட மயிலூரணி கிராமத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட பருத்தி செடிகளில் விளைந்து நிற்கும் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் தற்போதுதான் பறித்து அதை பிரித்து எடுத்து வியாபாரிகளிடம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மயிலூரணி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேதுராமன்தேவி கூறியதாவது:- கடந்த ஆண்டு நெல் விவசாயம் ஓரளவு விளைச்சல் பரவாயில்லை. நெல்லுக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்தது. நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டதால் 2 ஏக்கரில் பருத்தி செடிகள் நடவு செய்திருந்தேன். அந்த செடிகளில் விளைந்த பருத்தி பஞ்சுகளை பறிக்க முடியவில்லை. தற்போதுதான் பருத்தி பஞ்சுகள் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது பஞ்சுகளை பிரித்து அதன் பின்னர் வியாபாரிகளிடம் கொடுக்க முடிவு செய்துள்ளேன். கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி பஞ்சு ரூ.65-க்கு வாங்கினர். இந்த ஆண்டு பருத்திக்கு இனிதான் விலை தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.