கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம்
x

கொங்கணாபுரத்தில் ரூ.3¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

எடப்பாடி:

கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 200 மூட்டைகள் 1,600 லாட்டுகளாக வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 1 முதல் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 891 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 279 முதல் ரூ.9 ஆயிரத்து 761 வரை விற்பனையானது. பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.3 கோடியே 25 லட்சத்துக்கு ஏலம் போனது.


Next Story