ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,509-க்கு ஏலம்


ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,509-க்கு ஏலம்
x

ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,509-க்கு ஏலம் விடப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 173 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதன் சராசரி மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். கும்பகோணம், திருப்பூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 5 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை ஏலம் எடுத்தனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 509 என்றும், குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 559 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.


Next Story