கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
சேலம்
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பொதுஏலத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை நடந்தது. விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 6 ஆயிரத்து 800 பருத்தி மூட்டைகள் 1,200 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு பொதுஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தியானது குவின்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 250 முதல் ரூ.7 ஆயிரத்து 860 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7,850 முதல் ரூ.8,679 வரை விற்பனையானது. இதேபோல் கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.4,500 முதல் ரூ.6,066 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடந்த போது ஏலத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடந்தது.
Next Story