வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்


வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சியாத்தமங்கை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

சியாத்தமங்கை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருத்தி ஏலம்

திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1,800 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து213 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 299 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

220 குவிண்டால் கொள்முதல்

நடப்பு ஆண்டு கடந்த 13-ந் தேதி முதன் முதலில் நாகை மாவட்டத்தில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டது. இதுவரை 220 குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் 117 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். மேலும் பருத்தி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி அன்பழகன், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story