செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் : 19-ந்தேதி தொடங்குகிறது:
பொறையாறு:
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 19-ந் தேதி பருத்தி ஏலம் தொடங்குகிறது என்று நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் தங்களது வயலில் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம் முறையில்) பருத்தி ஏலம் தொடங்குகிறது. இதில் தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பருத்தி மில் அதிபர்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து ஏலத்தில் கலந்துகொண்டு நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.