ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.25 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது
தஞ்சாவூர்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 300 குவிண்டால் பருத்தி, விவசாயிகளால் கொண்டு வரப்பட்டிருந்தது. கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர் மற்றும் செம்பனார்கோவிலை சேர்ந்த 6 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.10,200-ம், குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6,799-ம், சராசரியாக குவிண்டாலுக்கு ரூ.8,269-ம் ஏலம் கேட்கப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.24 லட்சத்து 80 ஆயிரத்திற்கு பருத்தி ஏலம் போனது.
Related Tags :
Next Story