நோய் தாக்குதலால் பருத்தி விவசாயம் பாதிப்பு


நோய் தாக்குதலால் பருத்தி விவசாயம் பாதிப்பு
x

திருச்சுழி அருகே நோய் தாக்குதலால் பருத்தி விவசாயம் பாதிக்கப் பட்டது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே நோய் தாக்குதலால் பருத்தி விவசாயம் பாதிக்கப் பட்டது.

பருத்தி சாகுபடி

திருச்சுழி அருகே மறவர்பெருங்குடி, மீனாட்சி புரம், வெள்ளையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளைவிக்கப்பட்ட காய்கள் நன்கு விளைந்து வந்த வேளையில், வேர்ப்புழு தாக்குதலால் செடிகள் கருகி வேரோடு சாய்ந்து விட்டது.

ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்கள் மழையின்மை, மான்கள், காட்டுப்பன்றிகள் தொல்லை இவற்றையெல்லாம் சமாளித்து விவசாயிகள் காப்பாற்றி வந்தனர்.

நோய் தாக்குதல்

இந்தநிலையில் நோயினால் தற்போது பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- திருச்சுழி அருகே எண்ணற்ற விவசாயிகள் பருத்தியை சாகுபடி செய்து உள்ளோம். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் தற்போது நோய் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு, வேலை ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு சூழ்நிலைகளையும் தாண்டி செடிகள் வளர்ந்து வந்தன. இந்தநிலையில் ேநாய் தாக்குதலால் செடிகள் கருகி வருகின்றன. இதனால் எதிர்பார்த்த மகசூலும் இல்லை. லாபமும் இல்லை. செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனையும், நிவாரணமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story