திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் தொடங்கியது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.12ஆயிரத்து 129-க்கு விற்பனையானது.

திருவாரூர்

திருவாரூர், ஜூன்.2-

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் தொடங்கியது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.12ஆயிரத்து 129-க்கு விற்பனையானது.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பஞ்சுகள் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை விற்பனை செய்ய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து மறைமுக ஏலம் விடப்படுவது வழக்கம். திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் வாரந்தோறும் நடைபெறும்.

அதன்படி செவ்வாய்க்கிழமை தோறும் திருவாரூர், மூங்கில்குடியிலும், ி புதன்கிழமை தோறும் குடவாசலிலும், வெள்ளிக்கிழமை வலங்கைமானிலும் ஏலம் நடைபெறும்.

பருத்தி ஏலம்

இந்த ஆண்டு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. இதில் 140 விவசாயிகள் கலந்து கொண்டு, 300 மூட்டைகளில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ரூட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர்.

திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.12 ஆயிரத்து 129-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10 ஆயிரத்து 196-க்கும் விற்பனையானது. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக விலை பருத்திக்கு கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story