ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
x

நன்னிலம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,229-க்கு விலை போனது.

திருவாரூர்

நன்னிலம்;

நன்னிலம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,229-க்கு விலை போனது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடியில் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தி பஞ்சுகளை மூட்டைகளாக (சுமார் 2394 குவிண்டால்) விற்பனை கூட குடோனில் அடுக்கி வைத்திருந்தனர்.நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் திருவாரூர் விற்பனை கூட செயலாளர் சரசு, பூந்தோட்டம் விற்பனை கூட கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர், கோவை, திண்டுக்கல், பண்ருட்டி, கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை வாங்க வந்திருந்தனர்.

பாதுகாப்பு பணி

அவர்கள் பஞ்சின் தரத்தை பார்த்து விலை நிர்ணயம் செய்து ஏலப் பெட்டியில் போட்டிருந்தனர். அதன் பின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்த வியாபாரிகளுக்கு பருத்திப்பஞ்சு ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10ஆயிரத்து 229-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து189-க்கும்விலை போனது. அப்போது பிரச்சினைகளை தவிர்க்க நன்னிலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story