ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
திருப்பூர்
மூலனூர்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 430 விவசாயிகள் 4,104 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பங்கேற்றனர். அதன்படி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ..9,696-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.6,850-ற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1 கோடியே 6 லட்சத்து 12 ஆயிரத்து 400-க்கு ஏலம் போனது.
இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
--------------
Related Tags :
Next Story