கள்ளக்குறிச்சியில் ரூ.3½ லட்சத்திற்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சியில் ரூ.3½ லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 140 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக எடுத்து வந்திருந்தனர். இவற்றில் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 138-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 838-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 189-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 68-க்கும் விற்பனையானது. இந்த பருத்தியை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தார்.