அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

கும்பகோணத்தில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் சு.ப. தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கும்பகோணம் நாணயக்கார தெரு, ரஞ்சனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாகவும், நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

வெளிநடப்பு

இந்தநிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பத்ம. குமரேசன், ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் நடந்து முடிந்த பணிகளுக்கு உத்தேச ஒப்பந்தம் என்கிற அடிப்படையில் மன்ற ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எதுவும் மன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில் எங்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை, என பல்வேறு புகார்களை தெரிவித்து இவற்றுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி வளர்ச்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story