கடலூரில்வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்மாநில தலைவர் வெள்ளையன் பங்கேற்பு
கடலூரில் நடந்த வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டனர்.
40-வது வணிகர் தின விழா மற்றும் மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து லாரிகளில் நிலக்கரி துகள்களை கொண்டு செல்லும்போது மிகவும் பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும். மே மாதம் 5-ந் தேதி அச்சரப்பாக்கத்தில் வணிகர் தின மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொதுச் செயலாளர் சவுந்தர்ராஜன், பொருளாளர் பீர்முகமது, துணைத்தலைவர் மோகன கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், கடலூர் மாநகராட்சி வாடகைதாரர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், வணிகர் சங்கங்களின் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயபாலன், துணைத் தலைவர் ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.