ஒப்பந்ததாரரிடம் கவுன்சிலர் வாக்குவாதம்
திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில், சாலை சீரமைப்பு பணி தொடர்பாக கவுன்சிலர் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி 18-வது வார்டு ரவுண்டு ரோடு பகுதியில், கடந்த சில நாட்களாக சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் சித்திக் நேற்று சீரமைப்பு பணி நடக்கும் இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் தனது வார்டு பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் பல தெருக்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
அங்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் நல்ல நிலையில் இருக்கும் சிமெண்டு ரோட்டில் எதற்காக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது என்று ஒப்பந்ததாரரிடம் கேட்டார். அப்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை தான் செய்ய முடியும் என ஒப்பந்ததாரர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கவுன்சிலரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story