கவுன்சிலர்கள், பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்


கவுன்சிலர்கள், பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்
x

அடிப்படை தேவைகளை மேம்படு்த்தி ெகாள்ள கவுன்சிலர்கள், பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி கூறினார்.

மயிலாடுதுறை

அடிப்படை தேவைகளை மேம்படு்த்தி ெகாள்ள கவுன்சிலர்கள், பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து பொதுமக்கள், வணிகர்கள், நகராட்சி கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி கலந்துகொண்டு பேசுகையில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட திட்டம் நமக்கு நாமே திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் நீர்நிலைகள் புதுப்பித்தல், சாலை மேம்பாடு, சமூக கழிப்பறைகள், சந்தைகள் அமைப்பது, சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல், நவீன நூலகம், மழைநீர் வடிகால், மரம் நடுதல் போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தலாம்.

அடிப்படை தேவைகள்

ஒரு திட்டத்தின் குறைந்தபட்ச பொதுப்பங்களிப்பு திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும். நீர்நிலைகளை சீரமைப்பது தொடர்பான பணிகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பு 50 சதவீதமாக இருக்க வேண்டும். பொதுபங்களிப்புக்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது. எனவே நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்திகொள்வதற்கு நமக்குநாமே திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சனல்குமார் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story