கவுன்சிலர்கள், வார்டு மக்களை பார்த்துக் கொள்ள வேண்டும்


கவுன்சிலர்கள், வார்டு மக்களை பார்த்துக் கொள்ள வேண்டும்
x

தங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்வதுபோல் கவுன்சிலர்கள் வார்டு மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

தங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்வதுபோல் கவுன்சிலர்கள் வார்டு மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நாகை நகர்பகுதியை மேம்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நாகை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாகை நகர வளர்ச்சிக்கு ரூ.17 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்து இந்த ஆய்வு கூட்டத்தில் என்னிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் நிதி நிலையை பெருக்க கவுன்சிலர்கள் பாடுபட வேண்டும்.

மக்கள்தான் எஜமானர்கள்

மக்கள்தான் நமது எஜமானர்கள். தங்களது குடும்பத்தை பார்த்துக் கொள்வது போல் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டுகளில் உள்ள மக்களை பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் குறைகளை முடிந்தவரை கவுன்சிலர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். கவுன்சிலர்களால் முடியாதவற்றை நகர்மன்ற தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்து குறைகளை போக்க வேண்டும்.

குறைகளை நீக்க வேண்டும்

கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கு தினந்தோறும் காலை, மாலை சென்று மக்களின் குறைகளை நீக்க வேண்டும். நாகை நகர பகுதியில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிப்பதால் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து நாகை நகர வளர்ச்சிக்கு உதவி செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகூர் தர்காவில் பிரார்த்தனை

முன்னதாக நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்றார். அங்கு அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆண்டவர் பெரிய சன்னதியில் பிரார்த்தனை செய்தார். தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் சிறப்பு துவா ஓதினார்.

இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

இதை தொடர்ந்து அமைச்சர் செஞ்சிமஸ்தான் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், நாகூர் தர்கா மிகவும் பழமைவாய்ந்ததாகும். இங்குள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. சிறுபான்மை நலத்துறை, வக்புவாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாகூர் தர்கா மேம்படுத்தப்படும்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினர் மீது வைக்கும் ஊழல் புகார்களை நிருபித்தால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.


Next Story