பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கான ஆலோசனை முகாம்


பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கான ஆலோசனை முகாம்
x

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கான ஆலோசனை முகாம் நடந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கொளத்தூர் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட தொடங்குவது குறித்த ஆலோசனை முகாம், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகிர் உசேன் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வீடு இல்லாத அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மத்திய மாநில அரசுகளின் நிதியையும் சேர்ந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 460 வழங்கப்படுகிறது. இதற்கு நான்கு தவணைகளாக அடித்தளம், சுவர் எழுப்புதல், மேல்தளம், கழிவறை கட்டுவது என ஆய்வு செய்து பணம் வழங்கப்படும். மேலும் ஒரு வீடு கட்டுவதற்கு என 104 மூட்டை அம்மா சிமெண்டும், 320 கிலோ இரும்பு கம்பிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதில் திட்ட இயக்குனர் இலக்குவன், செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் விஜயசங்கர், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பயனாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, வீடு கட்ட தொடங்குமாறு அறிவுறுத்தினர். இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 125 பயனாளிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story